அன்புடைய நண்பர்களுக்கு,
பொருள்என்னும் பொய்யா விளக்கம் இருள் அறுக்கும்
எண்ணிய தேய்த்துச் சென்று .
“செல்வம் எனும் அணையா விளக்கு, ஒருவர் எண்ணிய இடம் எல்லாம் சென்று, அவரை
தெரியாதவர் இல்லை எனச் செய்யும்” என்ற வள்ளுவரின் பொருளை போல, அணையா விளக்கஆகிய செல்வத்தை எவ்வாறு சேர்க்கலாம் என்ற ஒரு எண்ணத்திலும் அவ்வாறு சேர்த்த செல்வத்தை எவ்வாறு பெருக்கலாம் என்பதை பற்றியதே இந்த தொடரின் நோக்கம்.
நான் இதை எவ்வாறு செய்து கொண்டு இருக்கிறேன் என்பதையும், எனது 10 வருட சந்தை அனுபவத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வதுமே இந்த தொடர் இடுகைன் முக்கிய நோக்கம். இது முழுவதும் சந்தை மற்றும் சேமிப்பு சம்மந்த பட்டது ஆகையால் என்னால் முடிந்த அளவு தமிழ் மற்றும் முக்கிய வார்த்தைகலை அப்படியே ஆங்கிலத்திலும் சேர்ந்தே எழுதுகிறேன். தமிழில் இது தொடர்பான நல்ல வல்லுனர்களின் புத்தகங்கள் இல்லை என்பதும் ஆங்கிலத்தில் இருக்கும் வார்த்தைகளை அப்படியே தமிழில் மொழி பெயர்ப்பதும் கொஞ்சம் கடினம் என்பதை இங்கு சொல்லி கொள்ள ஆசை படுகிறேன்.
சரி நாம் நமது பயணத்தை தொடரும் முன்பு இன்னும் ஒரு விஷயம், இதில் தொடராக இதை(சந்தை) பற்றியும் அவ்வப்போது நடப்பு நிகழ்வுகளும் அதன் பாதிப்புகளையும் இடுகிறேன், ஏனெனில் இறந்தகாலம் ஒரு உதாரணமே நிகழ் காலம் நம் கையில் இருக்கும் முதலை கொண்டு எதிர் கால குறிக்கோளை எப்படி அடைவது என்பதே நம் எல்லோருடைய நோக்கம்.
பங்கு சந்தை ஒரு அறிமுகம்
BSE மற்றும் NSE என்ற வார்த்தைகளும் அது சம்பந்தமான செய்திகளும் தினம்தோறும் நீங்கள் தற்போது அனைத்து ஊடகங்களிலும் பார்த்திருக்க அல்லது கேட்டு இருக்க கூடும். நம் நமது இடுகை பயணத்தை தொடுரும் முன்பு ஒரு சிறிய அறிமுகம் இந்த வார்த்தைகளுக்கு.

BSE என்பது மும்பை பங்கு சந்தையை குறிக்கும் (Bombay Stock Exchange )
! | உங்களுக்கு தெரியுமா? நமது மும்பை பங்கு சந்தையில் மாதம்தோறும் வர்த்தகத்தில் சுமார் 517 .51 கோடி பங்குகள் கைமாறுகிறது. இதன் மொத்த மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் 13,717 .89 கோடி இது BSE ன் செப்டம்பர் மாத புள்ளி விபரம் |
இவ்வாறு நடை பெறும் வர்த்தகத்தில்
தனி நபர்கள் (நான், நீங்கள் மற்றும் நம்மை போன்றவர்கள்), உள்நாட்டு நிதி நிறுவனங்கள், வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் மற்றும் பரஸ்பர நிதி நிறுவனங்கள் முதலீடு செய்கின்றனர்.
தனி நபர்கள் (நான், நீங்கள் மற்றும் நம்மை போன்றவர்கள்), உள்நாட்டு நிதி நிறுவனங்கள், வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் மற்றும் பரஸ்பர நிதி நிறுவனங்கள் முதலீடு செய்கின்றனர்.
ஏன் பங்கு வர்த்தகம்?
ஏன் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்கிறார்கள் அல்லது ஏன் செய்ய வேண்டும். உதாரணமாக நீங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்தால்
ஏன் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்கிறார்கள் அல்லது ஏன் செய்ய வேண்டும். உதாரணமாக நீங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்தால்
Banks | Max 10% |
Post office | Max 7.5% |
PPF | Max 8% |
அருகில் உள்ள அட்டவணையில் கண்ட வாறு உங்களுக்கு வட்டி கிடைக்கும்.
உங்களுக்கு இன்னும் பல வாய்ப்புகள் உதாரணமாக நிலம், தங்கம் மற்றும் அசையா சொத்துக்களில் முதலீடு செய்யலாம்.
ஆனால் இந்த முதலீடுகளில் அதன் காத்திருப்பு காலங்களும் அதனை தொடர்ந்து பாதுகாத்து பராமரிக்கும் செலவுகளும் கணக்கில் கொண்டால் பங்குகள் எவ்வளவோ தேவலாம்.
நீங்கள் பங்கில் முதலீடு செய்ய பெரிய பணக்காரராக இருக்க வேண்டும் என்பதில்லை
நீங்கள் பங்கில் முதலீடு செய்ய நிறைய பணம் தேவை இல்லை
நீங்கள் பங்கில் முதலீடு செய்ய எங்கும் செல்ல வேண்டியதில்லை
நீங்கள் பங்கில் முதலீடு செய்ய நிறைய பணம் தேவை இல்லை
நீங்கள் பங்கில் முதலீடு செய்ய எங்கும் செல்ல வேண்டியதில்லை
உதரணமாக நீங்கள் தங்கத்தில் முதலீடு செய்தால் அதன் பாதுகாப்பு ஒரு பெரிய கேள்வி குறி (?). நிலத்தில் முதலீடு செய்தால் உங்களுக்கே தெரியும் எவ்ளோவோ தொல்லைகள். ஆனால் இந்த பங்கு முதலீட்டை பாதுகாப்பது என்பது மிகவும் எளிதானது. அதுவும் தற்போது அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் அதை இன்னும் எளிதாகவும் அதே சமயம் பாதுகாப்பவகும் உள்ளது.
இதில் நீங்கள் உங்களின் திறமை மற்றும் ஒழுக்கமான முறைகளை மேற்கொண்டால் நிஜமாகவே நீங்களும் பெரிய முதலீட்டாளர் ஆகலாம்.
முதலீட்டு சிகரத்தை நோக்கி ........

Good One..Keep it up :)
ReplyDelete